ஆன்லைன் காதலரை சந்திக்க 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

மெக்சிகோ போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நாடு. இதற்காக மேயர் உள்ளிட்ட உயர்ந்த அரசியல் பதவியில் உள்ளவர்கள் கூட கொல்லப்படும் சூழல் காணப்படுகிறது.

கடத்தல் கும்பலை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டில் இருந்து பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் (வயது 51) என்ற பெண், ஆன்லைன் வழியே ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற ஆடவரை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த தொடர்பு நாளடைவில் காதலானது. இதனை தொடர்ந்து தனது காதலரை சந்திக்க பிளாங்கா ஒலிவியா முடிவு செய்துள்ளார். ஆனால், அதன் பின்னரே அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. காதலரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் புறப்பட்டு, 5 ஆயிரம் கி.மீ. கடந்து பயணம் செய்துள்ளார்.

ஆனால், அவர் சென்று சேர்ந்தது உறுப்புகளை திருடும் நபர் என பின்னரே தெரிய வந்துள்ளது. அதற்குள் அவரது உயிர் பறிபோய் விட்டது. உண்மையில் ஜூவான் தனது காதலியின் உறுப்புகளை பிரித்து எடுத்து உள்ளார்.

இது தெரியாமல் பிளாங்காவின் உறவினரான கர்லா ஆரில்லேனோ, பிளாங்காவிடம் பேசிய, பதில் வராத உரையாடல்களை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

இதுதவிர, பிளாங்காவின் காதலரிடமும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஒருவேளை அவரிடம் பிளாங்கா வந்து சேர்ந்துள்ளரா? என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக. ஆனால், அந்த நபரிடம் இருந்து, ஒரே போரிங் (வெறுப்புணர்வு) ஆக இருக்கிறது என கூறி பிளாங்கா மெக்சிகோவுக்கே திரும்பி சென்று விட்டார் என பதில் வந்துள்ளது.

இதன்பின், அவரை தேடி, தேடி பிளாங்காவின் குடும்பத்தினர் மனம் வெறுத்து விட்டனர். இந்த நிலையில், ஹுவாச்சோ பீச்சில் மீன் பிடித்த மீனவரின் வலையில், கொல்லப்பட்ட நிலையிலான பிளாங்காவின் உடல் சிக்கியுள்ளது. இதில், பிளாங்கா கொல்லப்பட்டது உறுதியானது.

அவரது உடல் உறுப்புகள் பல காணாமல் போயுள்ளன. இதனை கர்லாவும் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதற்கு நீதி வேண்டும் என அவர் குரல் கொடுத்து உள்ளார். நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களில் வருத்தம் தெரிவித்து உள்ளனர். பிளாங்காவுக்கு நீதி வேண்டும் என டிரெண்டிங் செய்தும் வருகின்றனர். காதலர் ஜூவானை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அவர் காதலியின் உடல் பாகங்களை திருடியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *