அண்ணல் அம்பேத்கர் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல உறுதிகொள்வோம் – மு.க.ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர் வெளியிட்டப் பதிவில் “சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை உருவாக்கித்தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய அரசியல் சாசன தினம் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *