தாம் ஆளுநர் பதவியை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர், தமக்கு தற்போது ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தாம் ஆளுநர் பதவியையே எதிர்பார்ப்பதாகவும், அடுத்த மாதம் அந்தப் பதவி கிடைக்கும் என நினைப்பதாகவும் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
ஆளுநர் பதவி கிடைத்தால், தாம் அதனை மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு தம்மால் முடிந்த சேவைகளை செய்வதாகவும் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.