கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், வெளிநாட்டுப் பணியாளர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல்கள், 314.4 மில்லியன் டொலராக பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாத வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல்கள், 355 மில்லியன் டொலராக காணப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9,991 மில்லியன் டொலராகவும், இறக்குமதி செலவு 14,085 டொலராகவும் பதிவானதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.