20 அகவைக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண சென் பெற்றிக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் மன்னார் புனிய சவேரியார் அணியை தோற்கடித்து சென் பெற்றிக்ஸ் அணி வெற்றியடைந்தது.
இந்த தகவலை இன்று நாடாளுமன்றில் வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,
குறித்த போட்டியில் இறுதிப்போட்டி வரையில் வெற்றி பெற்ற இரண்டு வடக்கு அணிகளும், அந்த இடத்துக்கு வரும் வரையில் பாரிய இடையூறுகளுக்கு முகங்கொடுத்ததாக தெரிவித்தார்.
ஆரம்ப நிலை போட்டிகளிலும் அரையிறுதிப் போட்டிகளிலும் இந்த இரண்டு அணிகளும் போட்டியிட்ட போது அவர்களின் உடல்களில் உள்ள சில அடையாளங்கள், தமக்கு போட்டிகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக எதிரணிகள் தெரிவித்திருந்தன.
இவ்வாறு பல மன ரீதியான அழுத்தங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்த இரண்டு வடமாகாண அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றமை குறித்து தாம் தமது பாராட்டை தெரிவிப்பதாக வினோநோகராதலிங்கம் குறிப்பிட்டார்.