மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகாய், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகாய் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘ஹம் தில் தே சுகே சனம்’, ‘பூல் புலையா’ போன்ற ஹிந்திப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தையும் பெற்றார்.
மேலும், கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் கோகாய், கடந்த 5ம் தேதி புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்ததால் கோமா நிலைக்குச் சென்றார்.
இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.