மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்.நீர்வேலி பகுதிக்கு கஞ்சா வாங்க வந்த இளைஞனை பின் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி – கரந்தன் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சுமார் 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் சாவகச்சோி பகுதியை சேர்ந்தவர் என தொியவருகிறது. மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாங்குளம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பின்தொடர்ந்து வந்த விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி – கரந்தன் சந்திப்பகுதியில் கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் விசாரணையில் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்தப்படவுள்ளார்,