தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: மஹிந்த

உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த முடியாது என்றும் இவ்வருட இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எல்லை நிர்ணய குழு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் காணப்படுகின்றது, எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சித் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என கூறுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனில், பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயம் என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *