வாய் பேச முடியாத மகன் ஒருவர் தனது தந்தையை கொடூரமான முறையில் அடித்து கொலை செய்து சம்பவமொன்று பதுளையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது பதுளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வாய் பேச முடியாத மகன் தனது 60 வயது உடைய தந்தையை மரக்கட்டையால் தலையில் அடித்துள்ளார்.
இதனால் தாக்கப்பட்ட தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த நபரை பதுளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை போலீசார் மேற்கொண்டு வருகின்ற பொது குறித்த இளைஞரின் தாயார் இரண்டு திருமணங்கள் முடித்தவர் என்பதுடன் முதல் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாகவும் தாயாரின் இரண்டாவது கணவரையே மகன் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.