திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான சகா கம்பஹா, அமுனுகொட, இம்புல்பே பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மினுவாங்கொடை, மகேவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலும் சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
வெபட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்,என கூறப்படுகிறது.