சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்து 125வது ஆண்டை முன்னிட்டு களுதாவளையில் நிகழ்வுகள்

சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்து 125வது ஆண்டை முன்னிட்டு மட்டக்ககளப்பு களுதாவளை இந்து மாமன்றத்தின் ஏற்பட்டில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) களுதாவளையில் செயற்பட்டுவரும் 8 அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே பல்வெறு போட்டி நிகழ்வுகள் நடைப்பெறுகின்றது.

களுதாவளை இந்து மாமன்றத்தின் தலைவர் ப.குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைப்பெறுகின்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவியர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டும் மாணவர்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள சுவாமி விவேகானந்தரின் இலங்கைக்கு விஜயம் செய்து 125 வது ஆண்டை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவின்போது பரிசில்களும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *