வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவன அனுசரணையில் மூதுாா் சேனையுர் கிராமத்தில் அனாமிகா பண்பாட்டு மைய வளாகத்தில் கணணி வளநிலையம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று(26) அனாமிக்கா பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரட்ணசிங்கம் தலமையைில் இடம்பெற்றது.
டிஜிட்டல் கல்வியை கிராமங்களில் மேம்படுத்தும் நோக்குடன் அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் வன்னி ஹோப் மற்றும் ஐக்கிய இராஜியத்தில் இயங்கிவரும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்படி கணினி வளநிலையம் ஸ்தாபிக்கப்பட்டு மக்கள் பாவணைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த கணனி வளநிலையத்தின் மூலம் சம்புர், சேனையுர் போன்ற கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கணனி அறிவினைப் பெற்று நன்மையடையவுள்ளனர்.
இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த வன்னி ஹோப் நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் மாலதி வரண், வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் மக்கள் சேரைவ மன்றத்தின் தலைவருமான எம். ரீ. எம். பாாிஸ், அனாமிக்க பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திருமதி பாலசுகுமாா் உட்பட பெற்றோா்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



