தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இந்நிலையில் இன்றையதினம் இலங்கை உட்பட தமிழர்வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
சற்றுமுன் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் தற்பொழுது ராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு செயற்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கத்தினால் 51ஆவது படைப்பிரிவில் தலைமையக முன்றலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது