துப்பாக்கி சூட்டின் பின்னர் முதல் பொது நிகழ்வில் இம்ரான் கான்

மூன்று வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், குறித்த சம்பவத்துக்கு பின்னர் முதல் தடவையாக பொது வெளியில் தோற்றியுள்ளார்.

ராவல்பிண்டி நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் அவர் பங்குபற்றினார். இதில் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர்.

இதன்போது, மரண பயமின்றி வாழ வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில் நிகழ்வொன்றின்போது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அங்கிருந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கானின் வலது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வஜிராபாத்தில் நடந்த இந்தத்தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சதி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் அதிகாரிகள் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய ஒரே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *