இலங்கைக்குவந்த சுற்றுலாப்பயணிகளில் ரஷ்யர்களே அதிகம்

குளிர்காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 41308 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் 10066 பேர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

அக்காலப்பகுதியில் 7021 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள அதேவேளை பிரித்தானியாவில் இருந்து 3276 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *