
காலி – அக்மீமன, ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 11 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த கல்வியியற் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் குழுவினரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த கல்லூரியில் பயின்றவர்களும், தற்போது பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினரும் திடீரென விடுதிக்கு வந்து தம்மை தாக்கியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அக்மீமன காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.