பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை

கல்விக் காலம் முடிவடைத்த பின்னரும்  பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களில் சுமார் 5 வீதமானவர்கள் அவர்களின் படிப்புக் காலத்தை முடித்த பின்னரும் பல்கலைக்கழகங்களில் உள்ளதாகவும் மேலும் இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி,  இவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

4 வருட பட்டப்படிப்பைப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மாணவர்கள் 04 வருடங்களில் பட்டம் பெறாவிட்டால் பல்கலைக்கழகத்தில் தங்க முடியாது. 90 வீதமான மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பிற்கு பதிவு செய்து 04 வருடங்களில் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றனர். எஞ்சியவர்கள் மேலும்  03 வருடங்கள்  பட்டப்படிப்பை முடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் .

அதன்படி,  இவ்வாறான மாணவர்கள் இனிமேல்  பல்கலைக்கழகங்களில் தங்கி இருந்து பட்டப் படிப்பை முடிக்க முடியாது.

மேலும் வெளியில் இருந்து பரீட்சைக்கு தோற்றி பரீட்சை கட்டணம் உட்பட சகல செலவினங்களையும் அவர்களே ஏற்க வேண்டும்.
இலவசக் கல்விக்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களுக்கு 4 வருடங்களுக்கு விடுதிகள்,  நீர்,  மின்சாரம், கற்பித்தல் போன்ற வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது  அதற்கு மேல் இந்த வசதிகள் வழங்கப்பட மாட்டாது.
04 வருடங்களின் பின்னர் மாணவர்கள் பட்டம் பெறாத பட்சத்தில் எஞ்சிய 03 வருடங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மற்றும் ஏனைய வசதிகளை பல்கலைக்கழகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாது.

அது தொடர்பில் அந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாக சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *