அளம்பிலில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

முல்லைத்தீவு அளம்பில் மக்களின் எற்பாட்டில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

மூன்று மாவீரர்களின் அக்கா மொறிஸ் வதனன் அக்னஸ்னால் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மாவீரர்நாளை மாவீரர்களின் குடும்பங்கள், அளம்பில் மக்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் பலர் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தி மாவீரர்களை வணங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *