யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு இன்றுமாலை தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாற்றுத்திறனாளியொருவரும் கலந்துகொண்டு கண்ணீர்மல்க மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.