கொழும்பில், கொவிட்-19 தொற்று மீண்டும் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை – வைத்தியர் ருவன் விஜயமுனி!

கொழும்பு நகரில் மற்றொரு பாரிய கொவிட்-19 பரவல் ஏற்படுவதற்கான ஆபத்து இல்லை என்று கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஒமிக்ரோன் பரவலின் பின்னர், பெருந்தொகையான நகர மக்கள், பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதனால் கொழும்பு நகரத்தினுள் கொவிட்-19 தொற்று மீண்டும் பாரியளவில் பரவுவதற்கான ஆபத்து எதுவும் இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

தேசிய தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து (IDH) தற்போதைய நிலைமை குறித்து பெற்ற புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கமைய, கடந்த சில நாட்களில் 50 வயதுக்கும் மேற்பட்ட சிலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மிகக்குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சுகாதார அமைச்சின் தகவல் தரப்பின்படி, கடந்த வாரம் சுமார் 150 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனையின் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *