அதிக பார்வையாளர்கள் நேரில் கண்டுகளித்த டி20 போட்டி: கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ

புதுடெல்லி,நவ 27

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா ,அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் ,நரேந்திர மோடி ஸ்டேடியம் “கின்னஸ் உலக சாதனை” படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் இந்த போட்டியை டி20 கிரிக்கெட் வரலாற்றில் மைதானத்தில் அதிக அளவில் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.இந்த நிலையில் மைதானத்தில் அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

அதன்படி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து ,566 பேர் நேரில் கண்டுகளித்தனர். பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.

இது குறித்து ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்.. இதை சாத்தியமாக்கியரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *