முதல்முறையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது கனடா!

உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், அவுஸ்ரேலியாவை வீழ்த்தி கனடா முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஸ்பெயினின் மலகாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், 2-0 என்ற கணக்கில் கனடா வெற்றிபெற்றது.

மார்ச் மாதம் நடந்த தகுதிச் சுற்றில் நெதர்லாந்திடம் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற கனடா, வியாழன் காலிறுதியில் ஜேர்மனியையும், சனிக்கிழமை நடந்த அரையிறுதியில் இத்தாலியையும் தோற்கடித்து, பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒற்றையர் போட்டிகளில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *