வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியளிக்கும் காரணம்

கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 557 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கத்தாரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வென்றதிலிருந்து இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், கத்தாரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.22 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவர்கள் மாரடைப்பினால் மரணமடைந்தார் என்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடத்தும் உரிமையை கட்டார் வென்றுள்ளது. 

போட்டியை நடத்த உரிமை பெற்ற போது, கத்தாரில் சர்வதேச தரத்தில் கால்பந்து மைதானம் எதுவும் இல்லை. இதனால் கத்தார் தனது அனைத்து மைதானங்களையும் புதிதாகக் கட்ட வேண்டியிருந்தது.

இது தவிர ஹோட்டல் உட்கட்டமைப்பு என பல்வேறு விடயங்களிலும் கட்டார் முதலீடு செய்ய வேண்டி இருந்தது.

இதனால் உலகக் கோப்பையை நடத்த மட்டும் கட்டாருக்கு 220 பில்லியன் (இந்திய மதிப்பில் 17 லட்சம் கோடி) செலவானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *