பெல்ஜியத்தில் கலவரத்தில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்கள்- பலர் கைது

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.

இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *