_63844d65e5b1d.jpg)
அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த நபர் சனிரைஸ்ஸர் அருந்தி உயிரை மாய்துள்ளதாக வெளிநாட்டு விவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
யாரும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம்.வடக்கு கிழக்கில் இருந்து அதிகளவானோர் இவ்வாறு ,பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி போலி முகவர்கள் மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.உக்கிரைனிலும் பலர் மாட்டிக் கொண்டுள்ளனர்.ஆகவே இது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.