சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் தொடர்பில் சற்று புரிதல் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் சில இடங்களில் இராணுவத்தினர் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டிருந்த போதிலும், பெரும்பாலான இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றன.
ஜனாதிபதி மற்றும் சிங்கள சகோதரர்கள் மத்தியில் தமிழ் மக்களின் உணர்வுகள் தொடர்பில் ஏற்பட்ட புரிதலால் இது சாத்தியமானது.
இதனை சரியாக புரிந்து கொண்ட சிங்கள சகோதரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிச்சயம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்.
எனினும், பல துயிலும் இல்லங்கள் இன்னும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
அவற்றை விடுவித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.