நமது நாடு வக்குரோத்தான நாடு-சஜித் தெரிவிப்பு!

நமது நாடு வக்குரோத்தான நாடு எனவும், சர்வதேச அளவில் அவதனாத்தை செலுத்தும் நாடாக நமது நாடுமாறியுள்ளதாகவும், நமது நாடு ஏலம் விடும் ஒரு நாடாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொம்பே தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்றைய தினம் (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டிலுள்ள இடங்கள், நம் நாட்டின் வளங்களை அற்ப விலைக்கு விற்க தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாகவும், சர்வதேச நாடுகள் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களும் நமது நாட்டைக்குறி வைத்து, வளங்களைச் சாதகமான விலையில் பெறக்கூடிய உத்திகளை இலாவகமாக செயற்படுத்தி வருவதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருக்கும் பொருளாதாரத்தை சுருக்கி, சிறு தொழில் முயற்சியாளர்களை இல்லாமலாக்கும் கொள்கையையே தற்போதைய அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும், வட்டி விகிதத்தை 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் இதன் பின்புலத்திலாகும் எனவும் அவர் கூறினார்.

புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகும் எனவும், பொருளாதார செயல்முறை சுருங்கும் எனவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் கையாளும் பொருளாதார சுருக்கக் கொள்கை conomic contraction  முற்றிலும் முட்டாள் தனமானது .

1988,1989 இல் நாடு நெருக்கடியை எதிரநோக்கிய தருணத்தில் மறைந்த ரணசிங்க பிரேமதாஸ பொருளாதாரத்தை சுருக்கும் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை எனவும், இரு பெரும் உள்ளக பிரச்சினைகள் நாட்டில் நிலவியபோதும் மக்கள் மத்தியில் பணபுழக்கம் காணப்பட்டதாகவும், முதலீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும்இ புதிய வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறும் ஜனாதிபதியே மறுபக்கம் வரி விதித்து வருகின்றார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *