இறம்பொடை, புலுபீல்ட் தோட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தங்களது உரிமைகளைக் கேட்டு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் இ.தோ.கா வின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் தலையிட்டால் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் தோட்ட நிர்வாக முகாமையாளருடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் சுமூகமான இணக்கப்பாடு எட்டியுள்ளது.
202 தொழிலாளர்களுக்கு சேவை கால கொடுப்பனவு , EPF, ETFபோன்ற கொடுப்பனவுகளை புலூம்பீலட் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தாமல் இருந்ததால் குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் விளைவாக இ.தோ.கா வின் தலையிட்டால் மூன்று வருடங்களின் பின் அவர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை குறித்த தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நிர்வாகம் வைப்பிலிட்டுள்ளது.
அதே நேரத்தில் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 10பேர்ஞ் நிலப்பரப்பும் குறித்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்க தோட்ட நிர்வாகம் முன் வந்துள்ளது. எனவே குறித்த ஊர் மக்கள் எதிர்வரும் முதலாம் திகதியும் முதல் தனது தொழிலுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.