கடந்த சில நாட்களுக்கு முன்பு க.பொ.த (சா/த) பெரும்பேறுகள் வெளியாகியுள்ள, நிலையில் கல்முனை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலையில், இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 A சித்தி பெற்று வரலாறு சாதனை படைத்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (28) கல்முனை அல் பஹ்ரியா பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைய கட்டிட தொகுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ். டீபைசால், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் உரையாற்றிய அதிபர் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பான பெருமைகளை கட்டாயம் பெற்று தருவோம் என பழைய மாணவர் சங்கத்திடம் கூறியுள்ளார்இஎன்பது குறிப்பிடத்தக்கது.