_63859d7ea563f.jpg)
யாழ்ப்பாண மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வீரியம் குறைந்துள்ளது என விவசாயிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முன்னைய காலங்களில் தூவப்பட்டு 9 தினங்களில் நேற்று நெற்பயிர்கள் வளர்ச்சியுடன் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட்ட உரம்,விசிறப்பட்டு 15 நாளாகியும் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பயிர்களில் காண முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
50 கிலோ கிராம் யூரியா உரம் பத்தாயிரம் ரூபாய் வீதம், பயிரிடப்பட்ட பரப்பளவிற்கு ஏற்ப கமநல சேவைகள் நிலையத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக விநியோகிக்கப்பட்ட யூரியா உரத்தை, அனைத்து நெற் செய்கையாளர்களும் பெற்றுக்கொண்டு பயன்படுத்தினர். ஆனால் முன்னைய காலங்கள் போன்று பயிர்களில் வளர்ச்சி காணப்படவில்லை.
யூரியா உரப் பொதியில் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி , என்பன இல்லாமையால் காலாவதியான உரம் வழங்கப்பட்டதாக விவசாயிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.