_6385a757decc7.jpg)
ஆறு மாதங்களின் பின்னர் வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மண்ணெண்ணெய் விநியோகம் நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டது.
ஒருவருக்கு 2000 ரூபா வீதம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டது, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விவசாய நிலங்களில் மண்ணெண்ணெய் பம்புகளை இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
இந்நிலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்று அலைமோதினர். அதனைத் தொடர்ந்து இன்றும் காலை நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக அறிய வருகிறது.