
இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் , வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பி ஈடுபட்டன.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி குறித்த பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ் சாலை ஐக்கிய மக்கள் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் கெ.முகுந்தன் அகால மரணம் அடைந்ததன் காரணமாக ,வட பிராந்திய சாலைகள் முன்னெடுத்திருந்த பணிபுறக்கணிப்பு தற்காலிமாக கைவிடப்பட்டு.போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.