ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.