இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகை அவசியமில்லை

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பாடசாலைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட உயர்தர மாணவர்களுக்காக நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80% வருகை வீதம் மாணவர்கள் கட்டாயம் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த ஒழுங்குமுறை 2022 உயர்தர மாணவர்களுக்கு பொருந்தாது.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு 80% வருகைப் பதிவு கட்டாயம் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி, எதிர்ப்புக்கள் மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாடசாலைக்கு சமூகமளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட மாணவர்களுக்கு விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply