அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!

<!–

அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானம்! – Athavan News

அந்நிய செலாவணிச் சந்தையின் அடிப்படையில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடையதாக வெளிநாட்டு செலாவணியை எமது நாட்டிலிருந்த வெளியே அனுப்புதலை நிறுத்துதல் மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அடிக்கடி ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 29 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதனால், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் 30 ஆம் திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Leave a Reply