
இலங்கையர்கள் 10 ஆயிரம் டொலர் பெறுமதியான இந்திய ரூபாவை தமது கையிருப்பில் வைத்திருக்க முடியுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு இலங்கை முன்வைத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி அளித்ததன் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இந்தியாவின் இந்த முடிவு வழங்கும் எனவும், நாடு தற்போது எதிர்நோக்கும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவும் எனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகள் டொலரை சார்ந்திருப்பதை குறைக்கும் முகமாகவும் ஆசியாவில் இந்திய ரூபாவை பிரபலப்படுத்தவும் இந்தியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் தற்போது இந்திய ரூபாவை வேறு ஒரு நாணயமாக மாற்றிக் கொள்ள முடியுமெனவும் அதற்கு இலங்கையில் உள்ள வங்கிகள் இந்தியாவில் உள்ள வங்கிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.