கடலுக்கு சென்று காணாமற்போன மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு

மட்டக்களப்பு – வாழைச்சேனை கடற்கரையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் கடலுக்கு சென்று காணாமற்போன மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், இந்திய கடலோர காவல் படையினரால் அந்தமான் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன்  உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

குறித்த மீனவர்களுடனான தொடர்பாடல் அற்றுப் போன  நிலையில்,  பல நாட்களான போதிலும் இவர்கள் குறித்து தகவல் ஏதும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் மீனவர்களின் குடும்பத்தினர் முறைப்பாடொன்றை பதிவு செய்ததுடன், கடற்றொழில் அமைச்சரிடமும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

Leave a Reply