முல்லை பாடசாலையில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை பதிவு!

முல்லைத்தீவு – தென்னியன்குளம் அ.த.க. பாடசாலையில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையில் 2021ஆண்டில்  தரம் 11 ஆரம்பிக்கப்பட்டாலும், முதற்தடவையாக க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிகவும் பின் தங்கிய பாடசாலையாக காணப்படும் இப்பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

மாணவர் ஒருவரின் சிறப்பான பெறுபேறாக 7A,1B,1C மற்றும் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் 100 வீத சித்தியும், இந்துசமய பாடத்தில் 100 வீத சித்தியும், கிறிஸ்தவ சமய பாடத்தில் 100 வீத சித்தியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது மேலதிக வகுப்புகளுக்கும் செல்லாது பாடசாலை ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply