
அவுஸ்திரேலிய நாட்டுக்கான உயர்ஸ்தானிகராலய உயர் பொலிஸ் அதிகாரி ரொபட் வில்சன் மற்றும் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்க்கு இடையில் இடம் பெற்ற குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலியாவுக்கு கப்பல் மூலம் செல்வதனால் எந்த பலனும் இல்லை, உரிய அரசாங்கம் மூலமாக திருப்பியனுப்பப்படுவர் மக்கள் வதந்திகளை நம்பாதீர்கள்,
இலட்சக்கணக்கான பணத்தை கொடுத்து ஏமாறாமல் சட்ட விரோதமான முறையில் செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்வது தொடர்பாகவும் உயர்ஸ்தானிகராலய உயர் பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் இதன் போது பொலிஸ் உயரதிகாரிகளிடத்தில் தெரிவித்துக் கொண்டார்.
குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலிய நாட்டின் பொலிஸ் உயரதிகாரி,ஊடக அதிகாரி உட்பட திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என பலர் கலந்து கொண்டனர்.