திருகோணமலையில் முதல்முறையாக வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், இளைஞர் அபிவிருத்தி அகமும் இணைந்து திருகோணமலை மாவட்ட கலைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மற்றும் இளைஞர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் வகையிலான  குருந்திரைப்பட போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் செவ்வாய்கிழமை (29)மாலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடத்தியது.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களின் குருந் திரைப்படங்கள், நாடகங்கள் என்பன  அரங்கேற்றப்பட்டது.

அத்தோடு சிறந்த குருந்திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த தயாரிப்பாளர், சிறப்பான சிறுவர் பாத்திரம், போட்டிகளில் பங்குபற்றிய நடிகர் நடிகைகளுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தோடு,இளைஞர் அபிவிருத்தி அகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரண்யா சுதர்சன், பட்டைய முகாமையாளர் கலாநிதி.சிறி ஞானேஸ்வரன், இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இணைப்பாளர் பொன்.சற்சிவானந்தம், குரும்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான வடமலை ராஜ்குமார், திருமலை சண்முகா இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சுலோசனா ஜெயபாலன், விவேகானந்தா இந்துக் கல்லூரி அதிபர் க.ரவிராஸ், இளைஞர் அபிவிருத்தி அகத்தின்  பொருளாளர் ம.உமா சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply