ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று!

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

பகல் – இரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி 1 – 0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இலங்கை அணி, இன்றைய போட்டியில் தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply