யாழ். மாநகர சபையின் செயல் – வீதிக்கு இறங்கிய மக்கள்!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கல்லூண்டாய் வைரவர் கோவிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சபை கழிவுகள் தமது பிரதேச சபை எல்லைக்குள் கொட்டப்படுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

மாநகர சபையின் கழிவுகளை வலி. தென்மேற்கு பிரதேச சபை உரமாக்குவதற்கு கேட்டதற்கு, மாநகர சபையினர் தாங்கள் இயற்கை உரம் உற்பத்தி செய்வதாகவும், தங்களுக்கே இந்த குப்பைகள் போதாது எனாறும் கூறி குப்பைகளை வழங்கவில்லை. பின்னர் குப்பைகளை வீசுகின்றனர்.

குப்பைகள் கொட்டுவதற்கு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் உழவு இயந்திரங்களும் வழிமறிக்கப்பட்டு வீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *