யாழில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்தவர் கைது!

தனது வீட்டில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் பொதியிட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவரது வீட்டினை முற்றுகையிட்ட போது , போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக சிறு சிறு பொதியாக போதைப்பொருளை பொதியிட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 1.56 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாகவும், சந்தேகநபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply