போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்க நடவடிக்கை

போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிஸாருக்கு தேவையான 5,000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.

“மேல் மாகாணத்தினுள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில், வாகன சாரதிகள் கொக்கைன், ஹெரோயின் போன்றவற்றைப் பயன்படுத்துவார்களாயின் இவ்வாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

அது செய்யப்பட வேண்டும். இன்று குறிப்பாக போதைப்பொருள் தொடர்பில் நாம் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இது வாகன சாரதிகளையும் பாதிக்கிறது. குறிப்பாக அந்த துறையை நான் சொல்லவில்லை. அந்தத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இன்று சில பக்கச்சார்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கருவிகளைக் கொடுக்கும்போது, ​​அவற்றை கொண்டு வீதியில் உடனடியாகப் பரிசோதிக்கும் திறன் கிடைக்கிறது. வருடாந்தம் போதைப்பொருள் காரணமாக ஏற்படும் விபத்துகளில் 400 பேர் இறக்கின்றனர். இதை நாம் குறைக்க வேண்டும்.என்றார்.

Leave a Reply