உலக கிண்ண கால்பந்து; நடப்பு சம்பியன் பிரான்ஸை வென்றது டுனீசியா

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதல் சுற்றில், டுனீசியா அணி தனது கடைசி  ஆட்டத்தில், நடப்புச் சம்பியனான பிரான்ஸை 1:0 கோல்களால் வென்றது.
குழு டி இல் பிரான்ஸ் அணி ஏற்கெனவே  2 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ், டுனீசியா அணிகளுக்கிடையிலான போட்டி கத்தாரின் எட்யூகேசன் சிட்டி அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியின்  58 ஆவது நிமிடத்தில் டுனீசிய வீரர்  வஹ்பி காஸ்ர் கோல் புகுத்தினார். 90 நிமிடங்கள் முடிவிலும் டுனீசியா 1:0 விகித்தில் முன்னிலையில் இருந்தது.
உபாதை ஈடு நேரத்தில் மேலதிக 8 ஆவது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் அன்டனி கீறிஸ்மேன் கோல் புகுத்தினார். எனினும் அது ஓவ்சைட் கோல் என அறிவிக்கப்பட்டு, அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இதனால் 1:0 விகிதத்தில் டுனிசீயா வென்றது.

டுனீசியாஅணி குழு டி இல் 4 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையே பெற்றதால் 2 ஆம் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எனினும், பிரான்ஸுடனான வெற்றியை டுனிசிய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

Leave a Reply