வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக சட்டத்தரணி உட்பட மூவர் கைது!

பாணந்துறையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ஒருவர் உட்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாணந்துறை – சில்வன் ஒழுங்கை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்துள்ளார்.

பணத்தை திருப்பி கொடுக்காதமை குறித்து விசாரிப்பதற்காக குறித்த பெண், சட்டத்தரணியுடன் அங்கு சென்றுள்ளார்.

அதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சட்டத்தரணி வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமது உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தியே குறித்த சட்டத்தரணி வானத்தை நோக்கி சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த துப்பாக்கி மற்றும் சட்டத்தரணிக்கு சொந்தமான வாகனம் என்பனவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *