பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலை மீண்டும் உயரும்?

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஹெட்டியாராச்சி எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடையும் என்று கருத்து தெரிவித்தார்.

தற்போது தேவைக்கு ஏற்ப சந்தைப்படுத்துவதற்கு மரக்கறி உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் நாட்டின் விவசாயத்துறையை ஆட்சியாளர்கள் நாசமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உள்நாட்டு உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கு ஏற்ப கரட், போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளும் கடுமையாக விலையுயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply