பேலியகொடையில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொடை, கறுப்புப் பாலம் பிரதேசத்தில் இருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பேலியகொடை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் 119 தகவல் வழங்கும் இலக்கத்துக்குக் கிடைத்த தகலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 5 அங்குலம் உயரம், ஒல்லியான உடலுடன், சில இடங்களில் தலைமுடி வெண்மையாகவும், வெள்ளை மீசையும் காணப்படுகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply