இந்திய இருபதுக்கு 20 போட்டிகளுக்கான புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா

இந்தியாவின் இருபதுக்கு 20 அணியில் இனி ரோஹிட் சர்மா, விராட் கோலி, மொஹமட் சமி, ரவிசந்திரன் அஷ்வின், தினேஸ் கார்த்திக் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள்.

இது தொடர்பில் ரோஹிட், கோலி உட்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன்படி இருபதுக்கு 20 போட்டிகளுக்கான புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் பாண்டியாவின் தலைமையில், இந்திய அணி, எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் மூன்று போட்டிகளில் போட்டியிடவுள்ளது.

இதேவேளை திருமணம் காரணமாக அணியின் உதவித் தலைவர் கே.எல். ராகுல் இலங்கை அணியுடனான தொடரில் பங்கேற்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply