எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு போதைப்பொருளே காரணம் – விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்

மன்னார் மாவட்டத்தில்  எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே காரணம் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி மகேந்திரநாதன்   தெரிவித்துள்ளார்.

  மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜா வினோதன்  தலைமையில் இன்று (1) மதியம் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் போது இதனை தெரிவித்தார்

 அவர் மேலும் தெரிவிக்கையில்:

உலக எயிட்ஸ் தினமானது 1988ம் ஆண்டு முதல்   கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி ‘சமத்துவத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப் பொருளில் இலங்கையில் கொண்டாடப்பட்டு வரும் அதே வேளையில் 4686 எச்.ஐ.வி நோயாளர்கள் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதில் 3377 பேர் ஆண்களாகவும் 1309 பேர் பெண்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆண் பெண் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால் 7க்கு ஒன்றாக காணப்படுகின்றது.

 வடமாகாணத்தில்  137  பேர், மன்னார் மாவட்டத்தில் 11 பேர்   எச் .ஐ .வி   நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையும் ஆண்களுக்கிடையேயான  பாலியல் தொடர்பு காரணமாக எச்.ஐ.வி .தொற்று ஏற்படுகிறது.

 இதனைத் தடுக்கும் முகமாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாக பல்வேறுபட்ட மட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதனைத் தவிர எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சை அவர்களுக்கான இரத்தப்பரிசோதனை ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்கள்  

இதேவேளை கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,,,,

2022 டிசம்பர் 1 உலக  எயிட்ஸ் தினம் சமத்துவத்தை உருவாக்குகின்ற தொனிப்பொருளோடு உலக  எயிட்ஸ்  தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில்  எயிட்ஸ் நோயானது பாரதூரமான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் 48  மில்லியனுக்கு  மேற்பட்டவர்கள் எயிட்ஸ்  தொற்றோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் 1.5 மில்லியன் பேர் புதிதாக 2001 ஆம் ஆண்டின் பின் உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டவர்கள்.
இலங்கையை  பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 400 க்கு மேற்பட்டவர்கள் எயிட்ஸ்  நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டத்திலும் ஒருவர்  எயிட்ஸ்   நோயோடு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

எய்ட்ஸ் நோயைப் பொறுத்தவரையில் (ART)ஆன்ட்டி ரெக்கவரி தெரபி தற்போது புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்ற போதிலும்  எயிட்ஸ்  நோயை தடுப்பதற்கான வழிமுறைகள், எயிட்ஸ்    நோயாளிகளை எவ்வாறு பராமரிக்கலாம்,அவர்களுடைய தேவைப்பாடு எவ்வாறு உள்ளது, போன்றவற்றில் இன்னும் விழிப்புணர்வும் போதிய நடவடிக்கையில் அவசியமாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply